நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். கட்சியின் தலைவராக விஜய்-யும், பொதுச்செயலாளராக புஸ்லி ஆனந்த் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்:27ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் விஜய் மக்கள் இயக்க செயலாளராக இருந்த பில்லா ஜெகனின் சகோதரி அஜிதா ஆக்னல் தலைமையில் ஓர் அணியும்,
பிரபல தொழிலதிபர் எஸ்.டி.ஆர். சாமுவேல் தலைமையில் ஓர் அணியும், மற்றொரு தொழிலதிபரான எஸ். பாலா தலைமையில் ஓர் அணியும் என மூன்று அணிகளாக தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர்களாகக் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் தலைமையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக யாரையும் அறிவிக்கவில்லை.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் எந்த அணியின் கீழ் செயல்படுவது என பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
யார் தூத்துக்குடி மாவட்டத்தின் பொறுப்பாளர் என்று தலைமை விரைந்து முடிவு எடுக்குமா.?.
த.வெ.க தொண்டர்கள் எதிர்பார்ப்பு.!.