தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக மத்திய அரசு சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் எம்பவர் இந்தியா சார்பில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குனர் சிவம் சர்மா தலைமை தாங்கினார். ஆணைய பொறியாளர் வீர ராஜேஷ்மணி வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும், என்பவர் இந்தியா கௌரவ செயலாளருமான ஆ. சங்கர் சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் விளக்கப்பட்டு சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மேலும், பஸ் லாரிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலக போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி சிறப்பாக செய்திருந்தார்.