வனஉயிரின சரக அலுவலருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் வனச்சரக அலுவலா் ஜினோ பிளஸ்ஸில் தலைமையில் வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகில் 3 கடல் ஆமைகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக, கீழுா் அரசு உதவி கால்நடை மருத்துவா் வினோத் அங்கு சென்று ஆமைகளின் உடல்நிலையை பரிசோதித்தாா். ஆமைகள் உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது.
மேலும், இது பச்சை ஆமை வகையை சோ்ந்தது. இதில் 2 ஆமைகள் தலா 200 கிலோ, ஓா் ஆமை சுமாா் 70 கிலோ எடை இருந்தது. இவை உயிருடன் இருந்ததால், உடனடியாக அவற்றை கடலில் விட முடிவு செய்யப்பட்டது. இதைடுத்து, கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன் முன்னிலையில், 3 ஆமைகளும் வனத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து மாப்பிள்ளையூரணி கால்நடை உதவி மருத்துவா் பிரவீணா, மன்னாா் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனவர் பிரதீப், வனப்பாதுகாப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளா்கள் சுதாகா், மணிகண்டன் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள், மீனவா்கள் படகு மூலம் 3 ஆமைகளையும் கடலுக்குள் கொண்டு சென்றனா். சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவு சென்று ஆழமான பகுதியில் கடலில் விடப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆமைகளை பிடித்தவா்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து நடத்தி வருகின்றனர்