தமிழர் வாழ்வில் கலைகள் மற்றும் தமிழர் கலைகளும் பண்பாடும் - பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்த்துக்குடியில் கருத்தரங்கம்.
தமிழ்நாடு தூத்துக்குடி
By admin on | 2025-01-12 17:06:15
தமிழர் வாழ்வில் கலைகள் மற்றும் தமிழர் கலைகளும் பண்பாடும் - பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்த்துக்குடியில் கருத்தரங்கம்.

தமிழர் வாழ்வில் கலைகள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது. 

பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் தமிழர் வாழ்வில் கலைகள் மற்றும் தமிழர் கலைகளும் பண்பாடும் என்னும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையானது இலக்கியத்தின் மீது ஆர்வமுள்ளவர்களின் ஒருங்கிணைப்பில் இயங்கிவருகிறது.

இப்பேரவையின் 23வது நிகழ்வாக பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (12-01-2025) தமிழர் வாழ்வில் கலைகள் மற்றும் தமிழர் கலைகளும் பண்பாடும் என்னும் தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.


தமிழர் வாழ்வில் கலைகள் என்னும் தலைப்பில் கலைவளர்மணி விருது பெற்றவரும், தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியின் அரங்கக்கலை பயிற்றுநருமான ப சக்திவேல் சிற்றுரை நிகழ்த்த, தமிழர் கலைகளும் பண்பாடும் என்னும் தலைப்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தமிழ் பேராசிரியை மு செல்வி பேருரையாற்றினார்.


முன்னதாக இலக்கிய ஆர்வலர் து பத்மநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட கருவூலப் பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி செய்யது முகம்மது செரிப் கருத்தாளர்கள் இருவரையும் வாழ்த்தி பேசினார்.

மேலும் சிறந்த தமிழ் பணிகளுக்காக சென்னை தன்னாட்சி நிறுவனமான அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் வழங்கிய பேரறிஞர் அண்ணா - 2025 விருது பெற்ற தூத்துக்குடி எழுத்தாளர் ஆர் சாந்தி பேரவை உறுப்பினர்கள் அனைவராலும் கவுரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி கவிஞர் செல்வ ராஜ்  25ஆம் ஆண்டு வெள்ளி விழா காணும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையினை பெருமைப் படுத்தி கவி பாடினார்.

நிறைவாக ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் முத்துசாமி நன்றியுரை கூறினார்.

தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 23வது கூடுகை நிகழ்வை பேரவைத் தலைவர் நெல்லை தேவன் மற்றும் செயலர் கவிஞர் மாரிமுத்து ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.



Last Updated by admin on2025-01-23 20:49:53

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE