தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கால்நடைகளுக்கு கால் நோய், வாய் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் உத்தரவின்பேரில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர். டி.செல்வகுமார் ஆலோசனைப்படி, ஆத்தூர் கால்நடை மருந்தகம் சார்பில் NADCP FMD 6வது சுற்று கால்நோய், வாய்நோய் தடுப்பூசி முகாம் இன்று (ஜன:12) நடைபெற்றது.
இந்த முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்தார். மேலும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் அசோக்குமார், பாலசிங், சிவா, மற்றும் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அழைத்து வரப்பட்ட 150 பசுக்களுக்கு டாக்டர். செந்தில் கண்ணன் மற்றும் உதவியாளர் மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கால் நோய் வாய் நோய் தடுப்பூசி செலுத்தினர்.
செய்தியாளர் - இப்ராஹிம்