வீதியில் விடப்பட்ட மூதாட்டி மீட்பு.
மாறிவரும் நாகரீக உலகில் ஏழ்மையினால் துன்புறும் மக்கள் பலர் உள்ளனர்.
பல்வேறு இடங்களில் பல நிலைகளில் புறந்தள்ளப்படும் மக்கள் பெருகி வருகின்றனர்.
குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் பல்வேறு சூழலில் தெருவில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியப் பெரு நகரங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகரில் புறந்தள்ளப்பட்ட ஆதரவற்ற முதியோர் கள் பலர் வீதியோரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி, திரெஸ்புரம், மாதவநாயர் நகரில் ஆறு ஆண்டுகளாக வீதியில் ஆதரவற்று வாழ்ந்த, கவனிப்பாற்று இருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க நாகக் கனி என்னும் மூதாட்டியை கண்ட, மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் பீ.கிளாரான்ஸ் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் அம்மூதாட்டியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.
மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகளின் மனித நேய மிக்க இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இரு தினங்களுக்கு முன்னர் 36 வயது மதிக்கத்தக்க கல்பனா என்னும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் அனுமதித்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.