தூத்துக்குடி: போதைப்பொருள் கடத்திய 8 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
தூத்துக்குடி வேம்பார்
By Mervin on | 2024-12-04 09:46:11
தூத்துக்குடி: போதைப்பொருள் கடத்திய 8 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 2022ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையிலிருந்து கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதை பொருள் இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த இருதயவாசு (43), கிங்பன் (25), சிலுவை (44), அஸ்வின் (26), சுபாஷ் (26), கபிலன் (22), சைமன் முத்து ( 29 ), ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த வின்ஸ்டன் (25) ஆகியோரை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 9.985 கிலோ கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர்.

இதன் வழக்கு, மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.செங்கமலச்செல்வன், கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Last Updated by Mervin on2024-12-05 00:25:19

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE