தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பொன்நகரை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு 3 மகன்கள் 1 மகள் உள்ளனர். முருகேசன் கூட்டாம்புளி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது 2வது மகன் வெள்ளக்கண்ணு (23) கொத்தனார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று வீட்டின் முன்பாக வெள்ளக்கண்ணு நின்றிருந்தபோது அங்கு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. அப்போது வெள்ளக்கண்ணு அபாய சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்த அவரது தம்பி தடுக்க முயன்ற கற்குவேல் அவரையும் கும்பல் வெட்டியது அவரும் படுகாயம் அடைந்துள்ளார்,
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது
இதுகுறித்து தகவலறிந்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, போடம்மாள் புரத்தை சேர்ந்த தங்க பாண்டி மகன் கார்த்திக் குமார் (24), முருகேசன் மகன் ராஜேஷ் (28), மற்றும் அவர்களது நண்பரான சதீஷ்குமார் (24), பாண்டி (23), குமார் (25), சதீஷ்குமார் (26) ஆகியோர் இருந்தனர். அங்குள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்களாம்.
அப்போது, அங்கு வந்த வெள்ளைக்கண்ணு மற்றும் அவரது நண்பரான வனராஜா, உதயகுமார், சுரேஷ் என்ற பன்னி சுரேஷ், கேபிரியல், ஜெயராஜ் ஆண்ட்ரூஸ், பாரதி கார்த்திக், சந்தனகுமார், பாலமுருகன் ஆகிய 9 பேர் அவர்களிடம் தகராறு செய்து, ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் உள்ளிட்ட 2 பேரையும் அரிவாளால் வெட்டினார்களாம். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், வெள்ளக்கண்ணு உட்பட 9பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதை அறிந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் வீட்டில் இருந்து வெளியே வந்த வெள்ளைகண்ணுவை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு 4 பேர் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட்டபகலில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.