தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற செயலாளருமான வழக்கறிஞர் பால்துரை மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு 100 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
விழாவில், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம்.ஸ்டாலின் வழக்கறிஞர் கிங்ஸ்டன். ஓட்டப்பிடாரம் உதயநிதி ரசிகர் மன்ற பொருப்பாளர் பாரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை செய்திருந்தார்.