தூத்துக்குடியில் 24 லட்சம் பணம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IV தீர்ப்பு.
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-10-10 15:09:44
தூத்துக்குடியில் 24 லட்சம் பணம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை  விதித்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IV தீர்ப்பு.

தூத்துக்குடியை சேர்ந்த நபரிடம் பர்னஸ் ஆயில் வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று கூறி ரூபாய் 24 லட்சம் பணம் மோசடி செய்த 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை  விதித்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IV தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மணல் தெருவைச் சேர்ந்த பெர்னி கொரைரா மகன் இக்னேஷியஸ் ப்ரேசர் கொரைரா (42) என்பவரிடம், திருநெல்வேலி கீழமகாராஜ நகரைச் சேர்ந்த தங்கராஜன் மகன் சலோமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜ் (33) என்பவர் அறிமுகமாகி தான் அரசு ஒப்பந்ததாரராக வேலை பார்ப்பதாகவும், பர்னஸ் ஆயிலின் விற்பனை நல்ல ஏற்றத்தில் உள்ளதால், பர்னஸ் ஆயிலை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  இதனை நம்பி மேற்படி இக்னேஷியஸ் பிரேசர் கொரைரா மொத்தம் ரூபாய் 24,05,000/- லட்சம் பணத்தை ரொக்க பணம் மற்றும் வங்கிக் கணக்கு மூலம் சலோமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜுக்கு  கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட எதிரி சாலமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜ் பர்னஸ் ஆயிலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக இக்னேஷியஸ் ப்ரேசர் கொரைரா  அளித்த  புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு - I போலீசார் வழக்கு பதிவு செய்து சாலமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IV நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி குபேரசுந்தர் நேற்று (09.10.2024) வழக்கின் குற்றவாளியான சாலமின் அற்புதராஜ் (எ) சாலமோன் அற்புதராஜுக்கு 3 ஆண்டு மெய்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு I காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்  வைரமணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


Last Updated by Mervin on2024-11-23 03:03:59

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE