கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த சந்தேரா காவல் நிலையத்தில் சிவில் சப்ளை காவல் அதிகாரியாக திவ்யஸ்ரீ என்பவர் பணிபுரிந்து வந்தார். திவ்யஸ்ரீக்கு திருமணம் முடிந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
திவ்யஸ்ரீ, அவரது கணவர் ராஜேஷ் இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திவ்யஸ்ரீக்கு சபரிமலையில் பணி ஒதுக்கப்பட்டு இருந்ததால், பள்ளியேரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று, சபரிமலை செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திவ்யஸ்ரீயை சரமாரியாக வெட்ட ஆரம்பித்தார். இதை தடுக்க முயன்ற அவரது தந்தை வாசுவையும் அவர் கண்மூடித்தனமாக வெட்டி இருக்கிறார்.
உயிர் தப்பிக்க வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்த திவ்யஸ்ரீயை பின்னாடியே துரத்தி வந்த ராஜேஷ் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவர, சிலர் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், அங்கிருந்து ராஜேஷ் தப்பி ஓடி விட்டார். ராஜேஷை போலீசார் துரத்தி செல்ல, ஒரு குளத்திற்குள் விழுந்து தப்பிக்க முயன்றவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பெண் போலீஸ் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை வாசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..