தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான புதுக்கோட்டை, முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி (27) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் இன்று (22.11.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.