நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு நிகழ்ச்சி
தூத்துக்குடி நாசரேத்
By Mervin on | 2024-11-22 22:29:57
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு நிகழ்ச்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலைய பள்ளி சிறார் மருத்துவ குழு மருத்துவர் பத்ரி ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வருகின்ற 24 மணி நேர அவசர சேவை எண் 1098 குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அவசர சேவை அழைப்பு எண் குறித்த அறிவிப்பு பலகை பள்ளியில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில், உடையார் குளம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் ரேவதி, லீதியாள், பள்ளி குழந்தைகள் நல அலகு பொறுப்பாளர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சுதாகர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE