நில உரிமையாளரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க எம்.எல்.ஏ சகோதரர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம்
By Mervin on | 2025-03-04 09:29:26
நில உரிமையாளரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க எம்.எல்.ஏ சகோதரர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு

துாத்துக்குடி மாவட்டம். தாலுகா, காளியம்மன் எட்டையபுரம் தாப்பாத்தி கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (46). ஓட்டப்பிடாரம், சிலோன் காலனியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம், அமோசா சோலார் நிறுவனத்திற்கு சொந்தமானது எனக்கூறி சிலர் அளவீடு செய்துள்ளனர.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாரிமுத்துவை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அமோச சோலார் நிறுவனத்திற்கு நிலத்தை கொடுக்காவிட்டால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதுகுறித்து மாரிமுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரித்த போலீசார், தி.மு.க.வை சேர்ந்த ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் (61), சென்னை, ஆவடியை சேர்ந்த அமோசா சோலார் நிறுவன மேலாளர் சீனிவாசன் (48), ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த துரை 42, தினேஷ்குமார் (38). சிவகாசியை சேர்ந்த கணேஷ், (39) உட்பட 8 பேர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

ஆயுதம் ஏந்தி தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தல், சட்டவிரோதமாக செயல்படுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE