எட்டையபுரம் அருகே தாய் மற்றும் மகள் இருவர் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!
தூத்துக்குடி எட்டையபுரம்
By Mervin on | 2025-03-03 20:27:30
எட்டையபுரம் அருகே தாய் மற்றும் மகள் இருவர் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே முகத்தை தலையணையால் அமுக்கி தாய் மற்றும் மகளை கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவன் மனைவி சீத்தாலட்சுமி (65). இந்த தம்பதியின் மகள் ராமஜெயந்தி (48), பூவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ராமஜெயந்தி தனது கணவர் விஷ்வாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்‌

இந்நிலையில், இன்று (03-03-25) மாலை 4 மணி வரை இவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளோர் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் தாய் மற்றும் மகள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்ம ஆசாமிகள் தாய் மற்றும் மகள் இருவரையும் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இருவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்ற விபரமும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதையடுத்து இருவரது உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் மற்றும் மகள் இருவரையும் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE