தமிழகத்தில் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். இந்த பிளஸ் டூ தேர்வில் மாணவர், மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதுவதற்காக தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு துவா நடைபெற்றது.
ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா தலைமையில் இமாம் சதக்கத்துல்லா சிறப்பு துவா செய்தார். இதில் தலைமை இமாம் அப்துல் அழிம் அரசு காஜி முஜிபுர் ரகுமான் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் எம் எஸ் எப் ரகுமான் துணைத் தலைவர் சாகுல் ஹமீது பொருளாளர் மூஸா, இமாம் சித்திக்,கிரசண்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன, முகமது குட்டி, மீராசா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.