கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வரும் மோடியின் மத்திய அரசாங்கம் விவசாயிகளை மட்டும் அல்ல தமிழ்நாட்டை வஞ்சித்து இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தூத்துக்குடியில் கூறினார்.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகை தந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ். தூத்துக்குடி வசந்த் டிவி மாவட்ட செய்தியாளர், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சங்க இணைச் செயலாளர் சதீஷ்குமார் இல்லத்திற்கு அமிர்தராஜ் வருகை தந்து மணமக்கள் ரீமஸ்-மெஸ்டிகாவை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 11 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் மோடியின் மத்திய அரசாங்கம் விவசாயிகளை மட்டும் தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டு தான் இருக்கிறது. இப்பொழுது விவசாயிகள் மட்டுமல்ல நீங்க வந்து இந்த பட்ஜெட்டை பார்த்தீங்கன்னா ஒரு தடவை வந்து சுத்தமா பத்து வருஷமா அவங்க சொல்றத விட்டுட்டாங்க வறுமை கோட்டுக்கு இருக்கும் போது எத்தனை மக்களை நாங்கள் உயர்த்துகிறோம் என்ற தரவை வந்து வெளியிடுவதே இல்லை என்ற முனைப்போடு இருக்கிறார்கள்.
ஒரு பட்ஜெட்டிலும் வறுமை கோட்டுக்கு கீழ் இத்தனை மக்களை நாங்கள் உயர்த்துகிறோம் மன்மோகன் சிங் காலத்திலே எத்தனை சதவீதம் மக்களை நாங்கள் உயர்த்துகிறோம் என்ற அந்த ஒரு தரவு வந்து கொண்டிருந்தது. அதை முற்றிலுமாக இப்போது வெளியிடவில்லை. உண்மையிலேயே வந்து வறுமைக் கோட்டிற்குள் உள்ள மக்கள் தற்போது அதிகமாகிட்டாங்க, 12 லட்ச ரூபாய் வருட வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் சில நன்மைகள் செய்திருக்கிறார்கள். மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உண்மையிலேயே இந்த யூனியன் கவர்மெண்ட் வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்க வேண்டும். இந்த மாதிரி இன்டைரக்ட் பணத்தை வாங்கிக்கொண்டு அதுக்கப்புறம் நீங்க கட்ட வேண்டாம் என்று சொல்வதற்கு பதிலாக பெட்ரோல் டீசல் விலையில் இருந்து வரியை குறைத்திருக்கலாம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை வந்து சரி செய்திருந்தால் எவ்வளவோ விஷயம் சரியாக இருக்கும். ஏழை மக்களுக்கு நேரடியாக பணம் வந்து சேருகின்ற மன்றேக திட்டம் இந்த மாதிரி திட்டத்தை எல்லாம் முடக்கிவிட்டு நாங்கள் நல்லது செய்து விட்டோம் என்று வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இல்ல இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விவசாயிகள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள், இதற்கெல்லாம் தக்க பதிலடி தருவார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில். மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன், காங்கிரஸ் எடிசன், முத்துமணி, போஸ், சங்கர், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்து விஜய மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.