நாசரேத்தில் இந்து முன்னணி பிரமுகா் கைது செய்யப்பட்டதை கண்டித்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் நிா்வாகிகள் திரண்டனர்.
நாசரேத்தைச் சோந்தவா அருணாச்சலம். தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணிச் செயலரான இவா், திருப்பரங்குன்றம் மலை குறித்து இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்தும் உடன்குடி பகுதியில் கடந்த ஜன. 27ஆம் தேதி முரசு கொட்டி பிரச்சாரம் செய்தாராம். அவரை குலசேகரன்பட்டினம் போலீசார் (பிப்:01) சனிக்கிழமை கைது செய்தனர்.
இதையறிந்த மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமையில் மண்டல செயலா் சக்திவேல், நிா்வாகிகள் காவல் நிலையத்தில் திரண்டு, அருணாச்சலத்தை விடுவிக்கக் கோரினாா். சாத்தான்குளம் டிஎஸ்பி சுபகுமாா், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோா் பேச்சு நடத்தி, வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், அருணாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாா் என்றும் தெரிவித்தனா்.
இதுகுறித்து, வி.பி.ஜெயக்குமார் கூறும்போது, மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை விவகாரத்தில் அரசமைப்பு சட்டத்தை மீறும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. இதைக்கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.