பறவைகள் மீது ஆர்வம் கொண்டவராக.நீங்கள்.?. தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அரிய வாய்ப்பு.!.
தமிழ்நாடு தூத்துக்குடி
By Mervin on | 2025-01-23 13:48:29
பறவைகள் மீது ஆர்வம் கொண்டவராக.நீங்கள்.?.  தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அரிய வாய்ப்பு.!.

தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அரிய வாய்ப்பு.!.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து நீலச்சிறகு வாத்து நம்ம ஊரு வெய்ந்தான் குளத்திற்கு வந்து விட்டது.

அது மட்டுமா எவரெஸ்ட் சிகரத்தைக் கடந்து வரித்தலை வாத்து விஜய நாராயணம் குளத்தில் முகாமிட்டுள்ளது.

தூத்துக்குடி பெருங்குளத்தில் நீளமான அலகைக் கொண்ட ஐரோப்பா தேச பறவையான கருவால் மூக்கன் சுறு சுறுப்பாக இரை தேடிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த பறவைகள் நம் ஊருக்கு வருகின்றன? என்ன வகையான பறவைகள் நம் குளங்களில் காணப்படுகின்றன? பொதுவான பறவைகள் எவை? மற்றும் அரிதான பறவைகள் எவை? என எண்ணற்ற கேள்விகள் நம் உள்ளங்களில் எழலாம். இவற்றிற்கு விடை காண கலந்து கொள்ளுங்கள்

15வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பில், திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழு, முத்து நகர் இயற்கை அமைப்பு, தூத்துக்குடி, நெல்லை இயற்கைச் சங்கம், திருநெல்வேலி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி மற்றும் ஈக்கோ ஜெசியூட், மதுரை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள அமைப்பு ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் கணக்கெடுப்பை நடத்துகின்றனர்.

கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட கூகுள் படிவத்தில் https://forms.gle/J3mVGSbENUMwPqVF6   ஜனவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு முனைவர். அ. தணிகைவேல் 95244 25519 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இக்கணக்கெடுப்பில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு 24ம் தேதி மதியம் 2.30 மணிக்கு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.

திருநெல்வேலியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், தென்காசி மாவட்டத்தில் இலஞ்சி டிடி டி ஏ டி.எஸ். டேனியல் ராஜம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

கடந்த வருடங்களில் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் பங்கேற்பை அதிகரிக்க இம்முறை அம்மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



Last Updated by Mervin on2025-01-23 21:03:49

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE