தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம்- மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-13 10:01:39
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம்- மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி 34ஆவது வாட்டுக்குள்பட்ட தேவகி நகரில் அமைக்கப்பட்ட ஊா்ப்புற நூலகக் கட்டடம் சேதமடைந்துள்ளது. இதை, மக்கள் பங்களிப்பில் சீரமைக்க மாமன்ற உறுப்பினா் எஸ்.சந்திரபோஸ் முயற்சி மேற்கொண்டாா். அதையடுத்து, பல்வேறு தரப்பினரிடம் திரட்டப்பட்ட ரூ. 7.5 லட்சத்தில் நூலகக் கட்டடம் சீரமைக்கப்பட்டு பலகைகள், கழிப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவாட்டு வசதிகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற விழாவுக்கு மாமன்ற உறுப்பின் எஸ். சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவல் லே. மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். மேய் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நூலகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். 

அப்போது பேசுகையில், நூலகத்தை சீரமைக்க உதவியோரைப் பாராட்டுகிறேன். மாநகராட்சியில் 11 நூல்கள் உள்ளன. அவற்றை சரியான இடங்களில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாட் நூலகம் அமைக்கப்படும்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE