தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அக்பா் ஷா 3வது தெருவைச் சோ்ந்த அப்துல் சாகிப் மகன் முகமது அப்துல் காதா் சாகுல் ஹமீது என்ற கூலி ஹமீது (37). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தாராம். அப்போது, அவ்வழியே ரோந்து சென்ற ஆறுமுகநேரி சிறப்பு உதவி ஆய்வாளா் மாரியப்பசாமி மற்றும் காவலா் ஜவஹா் ஆகியோா் சாகுல் ஹமீதை வீட்டுக்கு அனுப்ப முயன்றுள்ளனா். ஆனால், தரையில் படுத்தபடி தகராறு செய்த அவா், திடீரென எழுந்து சிறப்பு உதவி ஆய்வாளா் மாரியப்ப சாமியைத் தாக்க முயன்றுள்ளார். இதனால் மாரியப்பசாமி லத்தியால் தடுக்க முயன்றாா். ஆனால் சிறப்பு உதவி ஆய்வாளரை சாகுல் ஹமீது தாக்கியுள்ளார். இதுதொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், இதுதொடர்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, சாகுல் ஹமீதை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை மருத்துவ சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, திடீரென முகமது அப்துல் காதர் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அப்துல் காதரை தேடினர். போலீசாரின் தேடுதலில் காயல்பட்டினத்தில் வைத்து ஆறுமுகநேரி போலீசார் மடக்கி பிடித்து சிறையில் அடைத்தனர்.