கோவில்பட்டியில் இளம்பெண் மரணத்தில் சந்தேகம் - உறவினர்கள் மறியல் போராட்டம்
தூத்துக்குடி கோவில்பட்டி
By Mervin on | 2024-09-08 00:00:00
கோவில்பட்டியில் இளம்பெண் மரணத்தில் சந்தேகம் - உறவினர்கள் மறியல் போராட்டம்

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகுல். இவர் அஞ்சல் துறையில் ரயில்வே மெயில் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் சங்குபுரத்தைச் சேர்ந்த சங்கு சாமி மகள் காயத்ரி (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவி இருவரும் தெற்கு திட்டங்களும் மேல காலனி வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் ராகுல் பணிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை காயத்ரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையே காயத்ரி இறந்ததை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயத்ரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு புதுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் பட்டது. அவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் ஜின்னா பீர் முகமது, ராஜாராம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். 

சுமார் அரை மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் காரணமாக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி சென்ற வாகனங்கள் கடலையூர் சாலை, பழனி ஆண்டவர் கோவில் தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் தூத்துக்குடியில் இருந்து வந்த வாகனங்கள் எட்டயபுரம் சாலை வழியாக ஊருக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE