தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது அந்த செய்தி தூத்துக்குடி மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும். ஆனால் மிக கனமழையோ அதிகனமழைக்கோ வாய்ப்பு இல்லை. கடலோர பகுதிகளை விட உள் பகுதிகளில் தான் நல்ல மழை பெய்யும். தற்போது வரை வடகிழக்கு பருவமழை துவங்கவில்லை என்பதால் கடலோர பகுதிகளில் அதிகமழையை எதிர்பார்க்க முடியாது. எனவே அச்சமின்றி பொதுமக்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தென்காசி வெதர்மேன் தெரிவித்துள்ளார்