மீனவ சமுதாயத்தை புறக்கணிக்கிறதா த.வெ.க.?
இந்தியா தமிழ்நாடு
By admin on | 2025-01-09 09:00:55
மீனவ சமுதாயத்தை புறக்கணிக்கிறதா த.வெ.க.?

கொந்தளிக்கும் மீனவர் சமுதாய மக்கள்.!.

சாதியை ஒழிப்போம் சமத்துவத்தை வளர்ப்போம் என்பதெல்லாம் வெறும் மேடை பேச்சாகவே நின்றுவிடுவதாக குற்றம்சாட்டும் மீனவ மக்கள். 

தூத்துக்குடி மாவட்ட அரசியல் களத்தில் தேர்தல் போட்டியானாலும், கட்சி பொறுப்பானாலும் ஒரு குறிப்பிட்ட மெஜாரிட்டி சமூகத்திற்கே எல்லா கட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதில் பின்தங்கிய சமூகம் இன்று வரையில் கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நடைமுறையில் இருந்து மாற்றாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் மீனவ சமுதாய மக்களிடையே எதிர்பார்ப்பு நிரம்பி வழிவதால் தென்மாவட்டம் முழுவதும் கடலோர மக்களின் ஆதரவு விஜய்க்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

மீனவ மக்கள் முதலில் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே நபர் எம்.ஜி.ஆர் மட்டும் தான். தற்போது எம்.ஜி.ஆருக்கு பிறகு த.வெ.க தலைவர் விஜய்க்கே வழங்கியுள்ளனர். இந்நிலையில் மீனவ மக்களின் அரசியல் அடையாளத்தை ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள், ஆள நினைக்கும் கட்சிகள் எல்லாமே மீனவ மக்களின் அரசியல் அடையாளத்தை உடைத்தெறிய முயற்சி செய்து வருகிறார்கள். தவெக கட்சி தொடங்கிய நாள் முதல் இதன் வளர்ச்சியை முன்நிறுத்தி உழைத்தவர்களில் மீனவ மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதனால் தூத்துக்குடி த.வெ.க-வின் மாவட்ட தலைமையை ஓர் மீனவ சமுதாயமே தலைமை தாங்கும், வழி நடத்தும் என்பதில் இம்மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இதை த.வெ.க தலைமையும் ஏற்றுக் கொண்டதாகவே சொல்லப்படுகிறது. ஆனாலும் த.வெ.கவின் இந்த முயற்சியை ஆதிக்க சமூகம் விட்டு கொடுக்க தயாராக இல்லை.‌ அதன்படி த.வெ.கவில் மீனவ சமுதாயத்திற்கு எதிராக மீனவர் சமுதாயத்தை சேர்ந்த நபர்களுக்கு வாய்ப்பு அளிக்காத சூழல் ஏற்பட்டால் குமரி முதல் கோட்டை வரையில் வாழும் கடலோர மீனவ மக்களின் ஓட்டு வங்கியை த.வெ.க இழக்க நேரிடும் என்பதை இம்மக்கள் உறுதியாக கூறுகின்றனர் 

மேலும் அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்கள் ஒட்டுமொத்தமாக விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் ஒருமனதாக இணைந்து வருகின்றனர்.

இவர்களின் மாவட்ட செயலாளராக மீனவ சமுதாயத்தை சேர்ந்த நபர் வரவேண்டும் எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த நபரை வெற்றி அடைய செய்ய வேண்டும் எனவும் உறுதியுடன் உள்ளனர்.

இந்நிலையில் தேவையற்ற வதந்திகளை பரப்பியும், ஆதாரமற்ற பொய்யான தகவல்களை தலைமைக்கு தெரியப்படுத்தியும், மீனவ மக்களுக்கு தலைமை வழங்கப்படக் கூடிய மாவட்ட செயலாளர் பொறுப்பை கொடுக்கவிடாமல், மீனவர் சமுதாயம் இல்லாத வேறு நபருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பேசப்பட்டு வருகின்றது. 

இதனால் நம்பிக்கையுடன் இருந்த தூத்துக்குடி மீனவ சமுதாய மக்கள் மிகுந்த வேதனையிலும், அதிருப்தியிலும் உள்ளனர்

எனவே மீனவ மக்களின் கரம் பிடித்து த.வெ.க தலைவர் விஜய் வழிநடத்தி செல்வாரா?. அவ்லது மற்றவர்களைப் போல் ஓட்டுக்காக பயன்படுத்துவாரா? என்பதை வருகின்ற காலம் தான் பதில் சொல்லும்.

மொத்த மீனவ சமுதாயமும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 2020ஆம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி மத்திய மாவட்ட திமுக செயலாளர் முன்னிறுத்தி கடுமையாக பணி செய்து ஆட்சியைப் பிடிக்க தயாராக உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட மத்திய மாவட்ட செயலாளராக மீனவர் சமுதாயத்தை சேர்ந்த நபர் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு அளிப்பாரா.? அல்லது புறக்கணிப்பாரா.? தலைவர் விஜய்.

எதிர்பார்ப்பில் தூத்துக்குடி மீனவ மக்கள்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE