திருமணமாகி இரண்டே மாதங்கள் தான் - பேருந்து மோதி பெண் எஸ்.ஐ மற்றும் கணவர் பலி
தமிழ்நாடு கடலூர்
By Mervin on | 2025-01-05 18:51:11
திருமணமாகி இரண்டே மாதங்கள் தான் - பேருந்து மோதி பெண் எஸ்.ஐ மற்றும் கணவர் பலி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களே ஆன புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் இளவரசி. இவரது கணவர் கலைவேந்தன். இந்த தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற அரசுப்பேருந்து தம்பதியரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன தம்பதிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE