தூத்துக்குடி: மகிளா காங்கிரஸ் சார்பில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி, நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-09-08 00:00:00
தூத்துக்குடி: மகிளா காங்கிரஸ் சார்பில், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி, நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது.

மத நல்லிணக்க ஒற்றுமைக்காகவும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற கோரி தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்டம் மகிளா காங்கிரஸ் சார்பில் பழைய மாநகராட்சி முன்பு மகிளா காங்கிரஸ் மாநகர் துணைத்தலைவி பிரீத்தி தலைமையில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சையத் அசினா கலந்து கொண்டு இந்த நடைபயண பேரணியை துவக்கி வைத்தார். 

முன்னதாக வருகை தந்த மாநிலத் தலைவிக்கு பூர்ண கும்ப மரியாதையும் மலர் மாலையும் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நடைபயண பேரணி பழைய மாநகராட்சி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக இந்திரா காந்தி சிலை முன்பு இந்த நடைபயண பேரணி நிறைவு பெற்றது. பின்னர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தனலட்சுமி, மாநகர மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.முரளிதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், கே.டி.எம். ராஜா, மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன், கிழக்கு மண்டலத் தலைவர் மிக்கேல், வடக்கு மண்டலத் தலைவர் சின்னக்காளை, ஜான் சாமுவேல், மைதீன் மற்றும் ஏராளமான மகிளா காங்கிரஸின் நிர்வாகிகள், மாநகர காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE