தூத்துக்குடி தொகுதியில் தனக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களை கையில் எடுக்கிறாரா.? அமைச்சர் கீதா ஜீவன்.!.
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-04-07 12:15:51
தூத்துக்குடி தொகுதியில் தனக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களை கையில் எடுக்கிறாரா.? அமைச்சர் கீதா ஜீவன்.!.

வரூம் 2026 தேர்தல் அரசியல் தூத்துக்குடி தொகுதியில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் கடந்த காலங்களில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும் கடந்த அதிமுக ஆட்சியிலும், நடைபெற்று வருகிற திமுக ஆட்சியிலும் தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவனே இருந்து வருகிறார். வருகின்ற தேர்தலிலும் திமுக வேட்பாளராக கீதா ஜீவனுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வடக்கு மாவட்ட திமுகவினர் தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுக்குழு கூட்டத்தில் பேசியது போல திமுக-வுக்கும், தவேக-வுக்குமான நேரடியான மோதல் 2026 தேர்தல் களத்தில் தமிழகம் முழுவதும் போட்டியாக இருக்கும் என்று கூறினார். ஆனால் தமிழகம் முழுவதும் இருக்குமா.? என்பதை காட்டிலும் தூத்துக்குடி தொகுதியில் இருக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் தவெக தொண்டர்கள்.

தவெக-வின் வளர்ச்சி தூத்துக்குடி தொகுதியில் அசுர வளர்ச்சி பெற்று வந்தாலும், தவெக-வின் அதிரடி அரசியல் ஆளும் கட்சிக்கு நிகராகவும் பலமாகவும் தொகுதி முழுவதும் அமைந்து வருவதாலும் 2026 தேர்தல் களம் திமுக + தவேக-வுக்கான போட்டியாகும் இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரசியல் சூழ்நிலையில் இருந்து மாற்றம் காண திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,, தொகுதி அமைச்சருமான கீதாஜீவன் அஜித் ரசிகர்களை தன் வசப்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார், மேலும், மாவட்ட அஜித் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் மூலமாக 10ம் தேதி வெளியாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளவும் தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. விஜய் ரசிகர்களை காட்டிலும் தொகுதிக்குள் அஜித் ரசிகர்கள் பலம் வாய்ந்ததாக கருதிய கீதா ஜீவன் வெளிவரவுள்ள அஜித் படத்தின் மூலமாக திமுக வெற்றிக்கு இந்த ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் ரசிகர்களை வீட்டுக்கு வரவழைத்து ரகசியமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்ட கீதாஜீவன்

தூத்துக்குடியில் திரைக்கு வருகின்ற அஜித் படத்துக்கு, ரசிகர் ஷோ எடுத்து முதல் ஷோ-வை ஆரவாரத்துடன் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி நிறைந்த ஒரு மகிழ்ச்சியான தகவலால் மாவட்ட ரசிகர்களுக்குள் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது பாலகிருஷ்ணா திரையரங்கம் மற்றும் நியூ கிளியோப்பாட்ரா திரையரங்குகளில் வெளியாகும் அஜித் திரைப்படத்தின் ரசிகர் ஷோ அதாவது முதல் ஷோவுக்கான டிக்கட் ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கிட மாவட்ட மன்றம் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்குக் கிடைக்கப்பெற்றதால் உண்மை நிலையை தெரிந்துகொள்ள ரசிகர்கள் தயாரானார்கள்.  கடந்த காலங்களில் ரசிகர் ஷோ டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்கி வந்த நிலையில் இந்த திரைப்பட டிக்கெட் இலவசம் என்ற உடன் ரசிகர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் தவேக-வின் வளர்ச்சியை வீழ்த்த கீதா ஜீவன் முயற்சியா.?

.இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் இன்று தவெக எனும் ஒரு அரசியல் கட்சியாக உருமாறிய பிறகு திமுக-வுக்கான நேர் எதிர் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக தூத்துக்குடி தொகுதிக்குள் தவெக வளர்ச்சி பெற்று வருகிறது. இதை சிதைக்கவும், 2026 தேர்தலில் கீதா ஜீவன் மீண்டும் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறவும் தவேக-வின் பலம் நமக்கு இடையூறாக தான் இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட திமுகவினர், விஜய் ரசிகர்களின் பலத்தை உடைக்கவும், தவெக-வின் ஓட்டு வங்கியை சிதைக்கவும் அஜித் ரசிகர்களை தன்வசப்படுத்தி கொள்ள அஜித் படத்தின் ரசிகர் ஷோவை கையில் எடுத்திருப்பதாக தவெக மத்தியில் பேசப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட அஜித் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கீதாஜீவனின் விசுவாசியாகவும், ஆதரவாளர்களாகவும் தொகுதிக்குள் இருப்பதால் கீதாஜீவனின் உத்தரவை இவர்களால் தட்டிக் கழிக்கவோ, மறுக்கவோ முடியவில்லை. அதன்பிறகு அஜித் ரசிகர் மன்றத்தில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வரும்படி கீதாஜீவன் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி வீட்டிற்கு வருகை தந்தவர்களை எந்த கட்சியையும் சாராத உங்களை அன்புடன் வரவேற்கிறேன் என்று கூறி வந்தவர்களை வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். 

வீட்டுக்குள் வந்த அஜித் ரசிகர்களை அன்புடன் உபசரித்து விட்டு பாலகிருஷ்ணா மற்றும் நியூ கிளியோபாட்ரா திரையரங்கில் வெளியாகும் அஜித் படத்தின் ஷோ-விற்கான டிக்கட் செலவை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் ரசிகர்களுக்கு டிக்கெட்டை என் பெயரை சொல்லி இலவசமாக வழங்குங்கள் என்ற ஆசை வார்த்தைகளை கூறி மாவட்ட பொறுப்பாளர்களை ஒப்புக்கொள்ளும்படி வைத்துள்ளார். இதன்பிறகு ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த அஜித் படம் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் படம் பொறிக்கப்பட்ட டிக்கெட் மாதிரியை மன்ற பொறுப்பாளர்களுக்கு வழங்கி கீதாஜீவன் தொடங்கி வைத்துள்ளார்.. 

இந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே சர்ச்சையாகி வருகிறது

அஜித் ரசிகர்கள்பல கொள்கை பிடிப்போடு ஒரு சில அரசியல் கட்சிகளில் தன்னை ஈடுபடுத்தி செயல்படுத்தும் இந்த கால சூழ்நிலையில் ஓட்டு மொத்த மன்றத்தையும் ஒரு படத்தின் ரசிகர் ஷோவுக்காக கீதாஜீவனிடம் அடகு வைத்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறி, இச்சம்பவத்திற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், இதனால் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தூத்துக்குடி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் பரபரப்பு 10ம் தேதி பட ரீலிஸின் போது பதட்டத்தை உருவாக்கி விடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்கின்றனர் அஜித் ரசிகர்கள்.!.

எது எப்படியோ வரப்போகும் 2026 தேர்தல் தூத்துக்குடி தொகுதியை கைப்பற்றுவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.!.




Last Updated by Mervin on2025-04-18 14:32:06

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE