தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி இயற்பியல் துறையின் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டமான தூத்துக்குடியில் கல்விப்பணியில் தனக்கென தனியிடத்தைப் பிடித்து தன்னிகரற்று இயக்கிக் கொண்டிருப்பது ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி கல்லூரியின் ஈடுபாடு இணையற்ற துறையாக வருகிறது இயற்பியல் துறையின் சார்பில் இயற்பியல் அறிவியலின் சமீபத்திய போக்குகள் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கானது இறைவாழ்த்தோடும், தமிழ்த்தாய் வாழ்த்தோடும் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வின் தொடக்கமாக இயற்பியல் துறையின் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ரா.சுய பத்ர ஹரிதா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் க.சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறையின் பேராசிரியர் முனைவர் எஸ்.ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன் நியூட்ரினோக்கள்: பிரபஞ்சத்தின் மாயத்துகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும், இரண்டாம் அமர்வில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ்.ஆர். பாலாஜி ஒற்றைப் படிகங்கள் மற்றும் நானோ பொருட்களின் ரகசியங்களை டிகோட் செய்வதற்கான திருப்புமுனை முறைகள் என்ற தலைப்பு குறித்து விளக்கம் அளித்ததோடு மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். இக்கருத்தரங்கில் 105 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கின் நிறைவாக பங்கு பெற்ற பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்கின் இறுதியில் பேராசிரியர் முனைவர் ந.ரத்னா நன்றி நவில தேசிய கீதத்தோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது. கருத்தரங்க ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் எஸ்.சுதா, பி.சரஸ்வதி, எஸ்.அன்சியா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.