தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் (தன்னாட்சி) இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் (05/04/2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெசி தலைமையேற்று மாணவிகளுக்கான வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான முக்கியத்துவம் வழிமுறைகளை எடுத்துரைத்தார். கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சி.சிபானா அனைவரையும் வாழ்த்திப் பேசினார். வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர், உதவிப்பேராசிரியர் முனைவர் சோனல் கல்லூரியில் நடைபெற்று வரும் மாணவிகளுக்கானது போட்டித்தேர்வுகள் மற்றும் பிற பயிற்சி வகுப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் 22 கல்லூரி நிறுவனங்கள் பங்கேற்று மாணவிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.