கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்ப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர். இளம்பகவத் இ.ஆ.ப உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான கோவில்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன்பாரத் (19) மற்றும் கோவில்பட்டி, லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) ஆகிய இருவரையும் இன்று (05.04.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.