தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூபாலராய்புரம் 3வது தெரு மெயின் சாலையில் கழிவு நீர் கால்வாய் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட இடத்தில் பல மாதங்களாகியும் இதுவரையில் அடுத்தகட்ட பணிகளை செய்ய பணியாளர்கள் யாருமே வராததால் கால்வாய் பணிகள் இப்பகுதியில் முடங்கி கிடக்கிறது.
மேலும், இந்த இடம் பொதுமக்கள் கூடுகின்ற சந்தை (மார்க்கட்) என்பதால் போக்குவரத்து அதிகமாகக் உள்ள பகுதி..
கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குறிப்பிட்ட இந்த இடத்தில் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து நிற்கிறது. இந்த மரத்தை சுற்றி கால்வாய் பணிக்காக சுற்றி தோண்டப்பட்டு இருப்பதால், இந்த மரத்தின் வேர்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. வேர்கள் முழுமையாக அகற்றப்பட்டதால் பூமியில் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் இந்த மரம் அந்தரத்தில் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் நிற்கிறது. இதனால் இம்மரம் சரிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர். மேலும் அல்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் மரணபயத்திலையே கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் உள்ள மரத்தால் இந்த இடத்தில் எந்த நேரத்திலும் பெரும் விபத்து நடக்கலாம் என்று அங்குள்ள குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே, மேயர் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்