சேதமடைந்த தூத்துக்குடி பீஸ்ரோடு பாலத்தை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஆணையருக்கு தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலனுக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது
தூத்துக்குடி பீச் ரோடு பூங்கா அருகே உள்ள மெயின் ரோடு பாலத்தின் அடிப்பகுதி முற்றிலும் சேதமடைந்தது அபாயகரமானதாக உள்ளது.
அவ்வழியாக தினமும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள், பயணிகள் பேருந்து, மக்கள் அதிகளவில் உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள், துறைமுகப் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என்று ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, சேதமடைந்த பாலத்தைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க, தூத்துக்குடி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
காலம் தவறும் பட்சத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மக்களைத் திரட்டி போராட்டக் களத்தில் ஈடுபட தயாராவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன் என மனுவில் கூறியுள்ளார்