தூத்துக்குடியில் அதிமுக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-22 10:31:42
தூத்துக்குடியில் அதிமுக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் அதிமுக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், மாநில சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளர் ஃபாத்திமா அலி ஆகியோர் பங்கேற்று பேச்சு.

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனருமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம் நடத்திட அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொதுக்கூட்டம் 19.01.2025 அன்று தூத்துக்குடி சிக்னல் அருகே உள்ள எம்ஜிஆர் திடலில் வைத்து அதிமுக மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பகுதிச் செயலாளர்கள் சேவியர், நட்டார் முத்து, ஜெய்கணேஷ், பகுதி பொறுப்பாளர்கள் செண்பகச் செல்வன், சுடலை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர் வரவேற்று பேசினார்.
இந்த மாநில பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஃபாத்திமா அலி, தலைமைக் கழக பேச்சாளர் மதுரை தமிழரசன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் காலம் நெருங்கி விட்டது. தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு மற்றும் நிர்வாகிகளால் மக்கள் பிரச்சனைக்காக எடப்பாடி பழனிசாமி கடுமையாக போராடி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலில் அத்துமீறலை கண்டித்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட தோறும் நடைபெறும் மக்கள் பிரச்சனைக்காக அதிமுகவினர் கடுமையாக போராட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு மக்கள் பிரச்சனை ஏற்பட்டாலும் திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளரின் அனுமதி பெற்று நேரடியாக போராட்டம் நடத்தப்படும் என்றும் 2026 ஆம் ஆண்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் அரசு அமையும் என்றும் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான என். சின்னத்துரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், மண்டல அண்ணா தொழிற்சங்க மேற்கு போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், மாநகராட்சி மாநகராட்சி கொறடா மந்திரமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலட்சுமணன், நவ்ஷாத், துணை செயலாளர் கந்தன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் மனுவேல்ராஜ், துணை செயலாளர் ஆர். எம்.கே.எஸ். சுந்தர், எஸ்.கே. மாரியப்பன், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணை செயலாளர் ராஜதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், இணை செயலாளர்கள் சரவண பெருமாள், முனியசாமி, வக்கீல் செங்குட்டுவன், உதயகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சாந்தி, இந்திரா, ஞான புஷ்பம், ராஜேஸ்வரி, ராதா ஆனந்தராஜ், தமிழரசி. , ஷாலினி, அன்னபாக்கியம் , மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், அலெக்ஸ் ஜி, ரயில்வே மாரியப்பன், நாகூர் பிச்சை, நிர்வாகிகள் வர்த்தக அணி சுகுமார், ஹார்பர் பாண்டி, ஆத்தூர் அறிவுடை நம்பி பாண்டியன், தூத்துக்குடி மணிகண்டன், பொன்ராஜ், சங்கர், சந்திரசேகர், மகாராசன், மாரிமுத்து, முத்துக்குமார், பொன்னம்பலம், மாடசாமி, காலிப்உசேன், ஆர்.எஸ். மணி, கமலஹாசன், மனோகர் எம்.கே.சி. ஈஸ்வரன், தருவை ராஜா, கனகவேல், ஸ்டீபன், மற்றும் பாலாஜெயம், சாம்ராஜ், சொக்கலிங்கம், மைதின் உட்பட பெருந்திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
முடிவில் தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் ஏ. முருகன் நன்றி கூறினார்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE