தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 326 வழக்குகள் பதிவு - ரூ. 3.81 லட்சம் அபராதம்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-16 10:10:54
தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 326 வழக்குகள் பதிவு - ரூ. 3.81 லட்சம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் நாளான செவ்வாய்க்கிழமை, போக்குவரத்து விதிகளை மீறியதாக 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக, மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, போலீஸார் பொங்கலன்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 326 வழக்குகள் பதிந்து, ரூ. 3,81,500 அபராதம் விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE