பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் - இலங்கையை சேர்ந்த நபர் உள்பட இருவர் கைது
தூத்துக்குடி சாயர்புரம்
By Mervin on | 2025-01-16 09:54:58
பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் - இலங்கையை சேர்ந்த நபர் உள்பட இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, இலங்கை நபர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாவட்ட வனஅலுவலா் ரேவதி ராமன் உத்தரவுப்படி, வல்லநாடு வனச்சரகா் பிருந்தா தலைமையில், வனவர் கண்ணன், வனக்காப்பாளர்கள் காளி ராஜன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட வனத்துறையினர் சாயர்புரம் பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சாயர்புரம் காமராஜர் நகர் பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதுத்தொடர்பாக, இலங்கையின் கொழும்பு நகரை சோ்ந்த செங்கையா மகன் சத்ய கணேஷ் (40 ), தூத்துக்குடி தாளமுத்து நகர் சண்முகபுரத்தை சோ்ந்த அந்தோணித்துரை மகன் சேவியர் பிரான்சிஸ் (40) ஆகியோரை கைது செய்து, சேவியர் பிரான்சிஸை ஸ்ரீவைகுண்டம் சிறையிலும், சத்யகணேஷை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE