தமிழக பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக இருந்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர், மதுரை திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயது சிறுமியின் தந்தை ஒருவர், எம்.எஸ்.ஷா மீது மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷாவின் செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாசமான மெசேஜ்கள் வந்ததாக கூறியுள்ளார். மகளின் செல்போனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை, தனது மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த சிறுமி, எம்.எஸ்.ஷா தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனது மனைவி தனது மகளை அடிக்கடி தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லும்போது, பாஜக பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், தான் அழைக்கும் இடத்திற்கு வந்தால் புது பைக் வாங்கி தருவதாக கூறி, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்து, சிறுமியை வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். உனது கடனை நான் அடைத்து விடுகிறேன் என்று கூறி, புகார் அளித்தவரின் மனைவியோடு முதலில் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். பின்னர், அவரது மகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த புகாரையடுத்து, பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மற்றும் மாணவியின் தாய் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த எம்.எஸ்.ஷாவை கைது.