தூத்துக்குடியில் விதிமீறி இயக்கிய 24 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-20 10:42:20
தூத்துக்குடியில் விதிமீறி இயக்கிய 24 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 24 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்திருந்த பொதுமக்கள் மீண்டும் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு நேற்று (19-01-2025) சென்றனர். இதற்காக தூத்துக்குடி ஆம்னி பேருந்துகளில் நேற்று பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக சென்னைக்கு 1200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சில ஆம்னி பேருந்துகளில் நேற்று சுமார் 2000 ரூபாய் வரையும், பெங்களூருவுக்கு 1100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 1800 ரூபாய் வரையிலும், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து தூத்துக்குடி ஆம்னி பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெலிக்ஸ் மற்றும் பர்வீன் பானு ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? மேலும் ஏர்ஹாரன், பஸ்சின் ஆர்சி புக் ஆகியவை முறையாக உள்ளதா.? என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. சுமார் 30 ஆம்னி பஸ்களில் நடந்த சோதனையில் 24 ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டது.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE