மின்வாரிய அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல் - இன்ஜினியர் கைது
தூத்துக்குடி சாத்தான்குளம்
By Mervin on | 2024-11-16 09:56:20
மின்வாரிய அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல் - இன்ஜினியர் கைது

மதுரை திருநகர் பி.ஆர்.சி., காலனியை சேர்ந்தவர் கண்ணன், 49. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள துணை மின் அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த கண்ணன், அலுவலகத்தில் தனியாக இருந்த பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சாத்தான்குளம் போலீசார் நேற்று கண்ணனை கைது செய்தனர். 

கண்ணன், இதற்கு முன் பணி செய்த இடங்களிலும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் தான், சாத்தான்குளத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE