தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முறைகேடான குடிநீர் இணைப்பு மற்றும் கட்டுமான அனுமதிகள்.!. ஆணையர் கண்டுகொள்ளாதது ஏன்..?
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-11-15 20:29:12
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முறைகேடான குடிநீர் இணைப்பு மற்றும் கட்டுமான அனுமதிகள்.!. ஆணையர் கண்டுகொள்ளாதது ஏன்..?

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை ரோட்டில் பொதிகை கார்டன் உள்ளது. இப்பகுதியில் உள்ள காலி மனைகளுக்கு மாநகராட்சியால் புதிதாக வழங்கப்படும் நீல நிற குடிநீர் குழாய்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளில் இணைப்புக்கான குடிநீர் ரசீது உள்ளது என்பதை உறுதி செய்த பின்பு தான் நீல நிற பைப்லைன் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடு உள்ள பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு பொதிகை கார்டன் பகுதியில் காலி மனைகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளிலும் கவுன்சிலர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் இணைப்பு முறைகேடான குடிநீர்களும் வழங்கப்பட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

மேலும், மாநகராட்சி கட்டிடத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வணிக வளாக கட்டிடங்கள் பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்க வேண்டும் என விதி இருந்தும், அதைமீறி முறைகேடான கட்டிட அனுமதியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தினமும் மக்கள் அதிகம் கூடும், நடமாடும் பகுதியான தூத்துக்குடி சிவன் கோயில் அருகிலேயே முறைகேடான வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.  

இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை தெரிவித்தபோதும் அவர்கள் அலட்சியமே காட்டி வருகின்றனர்.

இது போன்ற திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக முறைகேடான செயலில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையர் மதுபாலன்.?.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE