தூத்துக்குடியில் ரூ3 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் அடிக்கல்- அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-11-13 22:08:56
தூத்துக்குடியில் ரூ3 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலைத்துறை  மண்டல இணை ஆணையர் அலுவலகம் அடிக்கல்- அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன்கோவில் பாரிவேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் 3 கோடியில் கட்டுவதற்கான தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுப் பணியை துவக்கி வைத்தார். முன்னதாக பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி வைத்து, கட்டுமான பணிக்கான செங்கல் எடுத்து வைத்து தொடங்கி வைத்தார். 

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர் ருக்குமணி, அறங்காவலர்குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்குழு உறுப்பினர்கள் சாந்தி, முருகேஸ்வரி, மந்திரமூர்த்தி, கோயில், ஜெயலெட்சுமி மற்றும் மணி, மாரிமுத்து சுப்பையா, தலைமை எழுத்தர் மாரியம்மாள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE