இருகுறித்து தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது,
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் தேவஸ்தானம்/ திருக்கோவிலுக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பானது சுமார் 76.5 ஏக்கர் நிலமாகும். கோவிலுக்கு சொந்தமான நிலமானது தூத்துக்குடியின் மாநகர பகுதிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகள் என பல பகுதிகளில் உள்ளன. இவ்வாறாக உள்ள நிலத்தின் மூலம் குத்தகை, வாடகை, கட்டுமான சேவைகள், ஊழியர்கள் குடியிருப்புகள் என பல வகைகளில் வருவாயாகவும் பயன்பாடாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் மாப்பிள்ளையூரணி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட (கோமஸ்புரம்) புல எண்: 130/3 ன் மொத்த பரப்பளவான சுமார் 4.59 ஏக்கர் மற்றும் புல எண்: 130/4 ன் மொத்த நிலப்பரப்பான சுமார் 1.92 ஏக்கர் நிலம் என மொத்தம் சுமார் 6.51 ஏக்கரின் ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் தேவஸ்தானத்தின் திருக்கோவிலுக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அதிகாரியின் கட்டுபாட்டில் உள்ள நிலமானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவனின் அதிகார மிரட்டல்களின் அடிப்படையில் அமைச்சரின் உறவினரான சுதா என்பவரின் பெயரில் ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கப்பட்டு அதில் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் அரசுக்கு வருவாய்ப் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் நிலத்தை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது உறவினர் பெயரில் குறைந்த வருவாய் குத்தகை எடுத்து அதில் உள்குத்தகை, உள்வாடகை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவரின் பங்கீடு மற்றும் தூத்துக்குடி திமுக நிர்வாகி அம்பாசங்கர் உள்ளிட்டோருக்கு ஆட்டுச்சந்தை குந்தகை நிலம், திமுக நிர்வாகி தெய்வேந்திரன் என்பவருக்கு வணிக நிறுவனம், அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் கல்யாணி என்பவரின் உறவினர் பெயரில் தேநீர் வணிக கடை ஒதுக்கீடு, அமைச்சரின் உதவியாளர் சூர்யா காய்கறி மார்க்கெட் மற்றும் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பல்வேறு வகையில் இத்தகைய கோயில் நிலமானது உள்நோக்கத்துடனும் அதிகார துஷ்பிரயோகங்களுடனும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டது சூறையாடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 6.51 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து தனது ஆளுங்கட்சி அதிகாரத்தை அமைச்சர் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுவதாகவும், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு மட்டும் பாரபட்சமான முறையில் நிலத்தை உள்குத்து உள்வாடகை உள்ளிட்டவை நடைபெறுகின்றன. எனவே உடனடியாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் மனுவில் கூறியுள்ளார்.