தூத்துக்குடி அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
தூத்துக்குடி புதியம்புத்துார்
By Mervin on | 2025-04-07 10:24:08
தூத்துக்குடி அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூா் பகுதியில் பழைய வீட்டின் சுவரை அகற்றும் பணியின்போது சுவா இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சோந்த தங்கவேல் மகன்முத்துகருப்பசாமி (42), சுந்தரலிங்கம் நகரைச் சோந்த நாராயணன் (35) மேலும் 3 போ, புதியம்புத்தூா் சுந்தரலிங்கம் நாக் பகுதியில், பழைய வீட்டின் சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுவரை இடித்தபோது எதிா்பாராதவிதமாக, அருகே நின்றிருந்த முத்துகருப்பசாமி, நாராயணன் ஆகியோா் மீது இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துகருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நாராயணன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவலறிந்த புதியம்புத்தூா் போலீஸாா் முத்துகருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தான். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE