போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு: தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்புக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டு
தூத்துக்குடி திருச்செந்தூர்
By Mervin on | 2025-04-05 11:20:24
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு: தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்புக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டு

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, இயற்கை வளப்பாதுகாப்பு, நீர் நிலைகளை பாதுகாக்கும் விதமாக நீர் நிலைகளில் பனைவிதைகளை நடவு செய்வது, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு என சூழல் மேம்பாடு சார்ந்த சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது வருகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் பசுமை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணியை கௌரவிக்கும் வகையில் நிறுவனத் தலைவர் எம்.ஏ. தாமோதரனுக்கு

கிரீன் சாம்பியன் விருது வழங்கி சிறப்பித்தது. 

இந்த ஆண்டு தமிழக அரசுக்கு துணைநிற்போம், காவல்துறைக்கு கரம் கொடுப்போம் என்கிற அடிப்படையில் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தொடங்கி கோவில்பட்டி வரை காவல்துறையோடு இணைந்து பள்ளி கல்லூரி மாணவிகள் மத்தியில் ஐந்து மாதங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சமூக நலன் கருதி சிறப்பாக தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நடத்தியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பையும், கூட்டமைப்பு மேற்கொண்ட மனிதனையும் காக்கும் மகத்தான பணி சார்ந்த புகைப்பட ஆவணங்களை பொறுமையாக பார்த்த மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இயற்கையை காக்க தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் பணி மகத்தானது. உங்களுடைய சுற்றுச்சூழல் சார்ந்த சமூகப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் தங்களது சமூகப்பணியினை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்வில், திமுக வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் உமரிசங்கர் மற்றும் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கிருபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE