14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவிதமான பணியிலும் அமர்த்தக் கூடாது - கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-04-04 16:54:36
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவிதமான பணியிலும் அமர்த்தக் கூடாது - கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை

குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை 2025-க்குள் மாற்ற வேண்டுமென்ற இலக்கின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்பு படை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் காண வாய்ப்புள்ள தொழிற்கூடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மாவட்ட தடுப்புப் படை, பொதுமக்கள். பள்ளி மாணவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள். அரசுத் துறை அலுவலர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

2024 மற்றும் 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன்கீழ், மாவட்ட தடுப்பு படையுடன் கூட்டாய்வுகள் மற்றும் இதர புகார்களின் அடிப்படையில் கடைகள் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 03 குழந்தைத் தொழிலாளர்கள். 07 வளரிளம் பருவத் தொழிலாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வேலையளிப்பவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியிலமர்த்தக் கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமே சேர்த்தோ விதிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தியிருந்தால் அது குறித்த விவரத்தினை குழந்தைப் பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலக்கம்) அலுவலகத்திற்கு எனத் தெரிவிக்கும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தியிருந்தால் அது குறித்த விவரத்தினை குழந்தைப் பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலக்கம்) அலுவலகம்  0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE