தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்ட்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் இன்று 29.08.2024 தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் உயர்நிலை பள்ளி வளாகத்தில் திராவகம் வீச்சு மற்றும் போக்சோ சட்டம் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த மூத்த பட்டியல் வழக்கறிஞர் ரெங்கநாதன், தலைமை தாங்கினார்.
அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தினி கௌசல் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மூத்த வழக்கறிஞர் தனது தலைமை உரையில் திராவகம் வீச்சு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும், இதன் மூலம் ஏற்படும் பிரச்சனையில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், 1098 செயல்பாடு குறித்தும், செல்ஃபோன் பயன்பாட்டில் உண்டாகும் ஆபத்து குறித்தும், இந்த வயதில் படிப்பு ஒன்று மட்டுமே மிக முக்கியம் எனவும் விளக்கமாக பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இம்முகாமில் 300-க்கு மேற்பட்டோர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்