தூத்துக்குடியில் உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு தவெக சார்பில் நலஉதவி - அஜிதா ஆக்னல் வழங்கினார்
தூத்துக்குடி முத்தையா புரம்
By Mervin on | 2025-03-06 08:41:02
தூத்துக்குடியில் உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு தவெக சார்பில் நலஉதவி - அஜிதா ஆக்னல் வழங்கினார்

தூத்துக்குடியில் அண்மையில் உயிரிழந்த தவேக தொண்டரின் குடும்பத்துக்கு கட்சி சாா்பில் நல உதவி வழங்கப்பட்டது.

தவெக தொண்டர்கள் பாதிக்கப்பட்டால் அவா்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியும் கட்சித் தொண்டருமான தாமராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருக்கு காப்பிணி மனைவியும், 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினரை தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் (05-03-2025 ) சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிறுமியின் ஆரம்பக் கல்வி முதல் உயகல்வி வரையிலான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக உறுதியளித்தாா். முதல்கட்டமாக, சிறுமியின் கல்விக் கட்டணம் ரூ. 20 ஆயிரத்தைப் பள்ளியில் நேரடியாக செலுத்தினாா். நிகழ்வில் தவெகவினர் உடனிருந்தனர்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE