அத்துமீறி அடுத்தவர் வீட்டுக்குள் பதுங்கிய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். இவர் கடந்த 18ஆம் தேதி மதியம் வீராணம் மெயின் ரோட்டில் ஒரு பூட்டிய வீட்டின் கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார். சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் கதவை திறந்ததை அடுத்து சுதாரித்து கொண்ட சதீஷ்குமார் தான் மற்றொரு பைக்கை அங்கேயே விட்டுவிட்டு காவலர் கார்த்திக் பைக்கில் தப்பிச் சென்றார்.
இதையறிந்த வீராணம் ஊர் பொதுமக்கள் எஸ்.ஐ.சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் ஒன்றாக திரண்டு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மறியல் போராட்டம் இதையடுத்து அவர்களிடம் தென்காசி மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால், ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்ணபாஸ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நியாயமான முறையில் விசாரணை நடத்தி எஸ்ஐ சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற மறியல் கைவிடப்பட்டது.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எஸ்ஐ சதீஷ்குமாரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு அவர்மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது
சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. அரவிந்த் நேற்று உத்தரவிட்டார்.
மேலும் எஸ்ஐக்கு உதவியாக இருந்த காவலர் கார்த்திக் என்பவர் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.