திருச்செந்தூர் முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர் அதிமுகவில் ஐக்கியம்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-22 10:14:59
திருச்செந்தூர் முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர் அதிமுகவில் ஐக்கியம்-  முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த திமுக பிரமுகரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்னாள் அறங்காவலரும் ஆத்தூர் சோமசுந்தரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கமிட்டி தலைவருமான ஆத்தூர் வி. எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 

இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான என். சின்னத்துரை, கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஃபாத்திமா அலி, மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜ்நாராயணன், மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் ஆர்.எஸ். மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாட்டினை முன்னாள் ஆழ்வார் திருநகரி ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆத்தூர் அறிவுடை நம்பி பாண்டியன் செய்திருந்தார்.

இத்துடன் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், தூத்துக்குடி மேற்கு பகுதி கழகச் செயலாளர் முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ராஜதுரை, மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் சரவண பெருமாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE