முள்ளக்காடு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்ததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-01-22 09:36:24
முள்ளக்காடு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்ததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

முள்ளக்காடு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்ததை கண்டித்து முள்ளக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில், முள்ளக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் கோபிநாத் நிர்மல் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முல்லைக்காடு ஊராட்சியில் உப்பளம் விவசாயம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவரின் கீழ் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது, சாலை குடிநீர் தெருவிளக்கு வடிகால் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன,

எனவே, ஊராட்சி மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் உடனடியாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது 

இதனை மீறி தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு ஊராட்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதனை வெளிப்படுத்தும் வகையில் இன்று ஊராட்சி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

ஏன் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது?.

தூத்துக்குடி மாநகராட்சி 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது 5 ஊராட்சிகளை இணைத்துக் கொண்டு உருவானது,

அப்போது இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் 100% அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி மேற்கொள்ளப்படும் பிறகே வரிகள் உயர்த்தப்பட்டது என உறுதிமொழி அளிக்கப்பட்டது.

ஆனால், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இதுவும் மேற்கொள்ளப்படாமல் 100% வரிகள் மட்டும் உயர்த்தப்பட்டதோடு ஆண்டுக்கு இருமுறை வரியும் நடைமுறையில் இருந்து வருகிறது.

வீட்டு வரியுடன் பாதாள சாக்கடை இருப்பதாக வசூலிக்கிறார்கள்,ஆனால் எந்த இடத்திலும் பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை என்று பொய்யாக கூறி வரி வசூல் செய்கின்றனர். 

இது கிணத்தை காணவில்லை என்ற வடிவேல் சினிமா காமெடி போல உள்ளது,

எனவே, 15 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது, 

திருச்செந்தூர் பிரதான சாலை ஊராட்சி வழியாக செல்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் இந்த சாலை மரணக்கிடங்குகளாக, மணல்மேடுகளாக இருந்து வருகிறது, சாலை தடுப்புச் சுவர் காற்றில் ஆடியபடி கம்பிகள் நீண்டு பலரது உயிரைக் குடித்து வருகிறது

எனவே, இந்த நிர்வாக சீர்கேடுகள் நிறைந்த மாநகராட்சியுடன் எங்கள் ஊராட்சியை இணைக்க நாங்கள் விரும்பும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் முள்ளக்காடு ஊர் கோவில் தர்மகர்த் தாக்கள் சேகர்,ரகுபதி என்ற சின்னராஜ்,. முள்ளக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் கோபிநாத் நிர்மல், பொட்டல் காடு ஊர் தலைவர் ஜெய கிருஷ்ணன், செயலாளர் திவாகர், பொருளாளர் முத்துராஜ்,மற்றும் உப்பு உற்பத்தியாளர் சிவாகர், காமராஜர் இளைஞர் சங்க தலைவர் கோகுல் நாடார், வக்கீல் பாஸ்கர், திமுகவைச் சேர்ந்த சில்வர் சிவா, அதிமுக செயலாளர் ஸ்ரீராம், கணேசன் கம்யூனிஸ்ட் கட்சி மகாராஜன், நாம் தமிழர் கட்சி ஆனந்த், பால்ராஜ்,முள்ளக்காடு பொட்டல்காடு ஊர் பொதுமக்கள் உப்பள தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE