தூத்துக்குடி மாநகர திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெ. மணிமாறன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நேற்று 17.01.2025 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் -ஐ தூத்துக்குடி மாவட்ட கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றார்.
இந்நிகழ்வின்போது அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வட்டச் செயலாளர்கள் அருண் ஜெயக்குமார், சொக்கலிங்கம், இளைஞர் பாசறை மாவட்ட துணைத் தலைவர் முள்ளக்காடு ஸ்ரீ ராம் மற்றும் லயன்ஸ்டவுன் எபிண்டன் பெர்னாண்டோ, கண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.